என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வாலிபர்கள் பலி"
- ஆலங்காயத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது.
- காவாபட்டறை அருகே பஸ் வரும்போது எதிரே பைக்கில் வந்த அருள்குமார், பிரவீன் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அடுத்த முல்லை நிம்மியம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முருகேஷ் என்பவரது மகன் பிரவீன் (வயது 27). அதே பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் அருள்குமார் (24). இருவரும் நண்பர்கள். திருப்பத்தூரில் யோகா பயிற்சி பெற்று வந்தனர்.
வாலிபர்கள் 2 பேரும் தினமும் பைக்கில் யோகா பயிற்சி மையத்திற்கு சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் வழக்கம் போல யோகா பயிற்சி மையத்துக்கு பிரவீனும், அருள்குமாரும் பைக்கில் இன்று காலை சென்று கொண்டிருந்தனர்.
ஆலங்காயத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது.
காவாபட்டறை அருகே பஸ் வரும்போது எதிரே பைக்கில் வந்த அருள்குமார், பிரவீன் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் வாலிபர்கள் தூக்கி வீசப்பட்டனர். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள் குரிசிலாப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அருள்குமார், பிரவீன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் போக்குவரத்தை சீர் செய்து விபத்து ஏற்படுத்திய அரசு பஸ்சை போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து கண்டக்டர், டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கிழக்கு கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் மீது மோதியது.
- மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களும் தூக்கி வீசப்பட்டனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள அருவிக்கரை பகுதியை சேர்ந்த வாலிபர்கள் ஷிபின் (வயது 18), நிதின் (21). சம்பவத்தன்று இவர்கள், விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் சென்றனர். பழைய போலீஸ் நிலையம் அருகே வந்தபோது அவர்களது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கிழக்கு கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயமடைந்த அவர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இருந்த போதிலும் வாலிபர்கள் இருவரும் பரிதாபமாக இறந்தனர்.
இந்த விபத்தில் பஸ்சில் வந்த 2 பயணிகளும் காயமடைந்தனர்.
- தூத்துக்குடியில் இருந்து கீழவைப்பார் செல்லும் அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- விபத்தில் பலத்த காயம் அடைந்த மனோஜ் குமார் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
புதியம்புத்தூர்:
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே உள்ள அய்யனார்புரத்தைச் சேர்ந்தவர் ஜோதிகேசவன் (வயது19). இவரது நண்பர் ஈரோடு வாய்க்கால் மேடு பகுதியைச் சேர்ந்த மனோஜ் குமார் (21).
தசரா விழாவிற்கு வந்திருந்த மனோஜ்குமார், ஜோதிகேசவன் வீட்டில் தங்கியிருந்தார். நண்பர்கள் இருவரும் சம்பவத்தன்று ஊரில் இருந்து மோட்டார் சைக்கிளில் குளத்தூர் சென்று விட்டு பின்னர் இரவில் அவர்கள் மீண்டும் வீடு திரும்பி உள்ளனர்.
அவர்கள் வேப்பலோடை அருகில் வரும்போது தூத்துக்குடியில் இருந்து கீழவைப்பார் செல்லும் அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. விபத்தில் பலத்த காயம் அடைந்த மனோஜ் குமார் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு தருவைகுளம் போலீசார் விரைந்து சென்று படுகாயமடைந்த ஜோதிகேசவனை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவரான புதூர்பாண்டியாபுரம் சேர்ந்த மதுரைவீரன் (38) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விபத்து குறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பாலாற்று மேம்பாலத்தில் விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே உள்ள குருவிமலை, பள்ளத்தெரு பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது27). ஏ.சி.மெக்கானிக். இவர் நேற்று இரவு காஞ்சிபுரத்தில் வேலையை முடித்துவிட்டு குருவிமலையில் உள்ள வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். இரவு 11 மணியளவில் ஓரிக்கை, பாலாற்று மேம்பாலத்தில் சென்றபோது, எதிரே தேனம்பாக்கம் பாலாஜி நகர் பகுதியை சேர்ந்த எலெக்ட்ரீசியன்கள் ஆனந்தன் (50) மற்றும் தாமரை குளம் விரிவாக்கம் பகுதியை சேர்ந்த சதீஷ் (17) எதிரே ஒரே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர்.
திடீரென மூர்த்தி மற்றும் ஆனந்தன் ஓட்டிவந்த மோட்டார்சைக்கிள்கள் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் வேகமாக மோதியது. இதில் 2 மோட்டார் சைக்கிள்களில் இருந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த ஆனந்தன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மேலும் மூர்த்தி மற்றும் சதீஷ் ஆகிய 2 பேரும் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் ஆம்புலன்சு மூலம் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூர்த்தியும் இறந்து போனார். சதீசுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். பாலாற்று மேம்பாலத்தில் விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஓரிக்கை பாலாற்று மேம்பாலத்தில் வாகனங்கள் அனைத்தும் கட்டுப்பாடின்றி அதிவேகமாக செல்வதால் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே மேம்பாலத்தில் வாகனங்கள் மெதுவாக செல்லும் வகையில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- லோகேஷ் மற்றும் பீமாராவ் இருவரும் தப்பி வெளியில் வந்துள்ளனர்.
- அரூர் அடுத்த டி.அம்மாபேட்டையை சேர்ந்த 8 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
அரூர்:
தருமபுரி மாவட்டம் அரூர் டி.அம்மாபேட்டை சேர்ந்த இளைஞர்கள் 25க்கும் மேற்பட்டோர், ஓசூர், கர்நாடக பகுதிகளில் உள்ள பட்டாசு குடோன்களில் வேலை செய்வதற்காக சென்று உள்ளனர். இதில் 15 இளைஞர்கள் ஒரு பகுதிக்கு சென்றுள்ளனர். இதில் 10 இளைஞர்கள் தமிழ்நாடு- கர்நாடக எல்லையில் உள்ள அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு குடோனில் வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று பட்டாசு குடோனுக்கு தேவையான பட்டாசுகள் கன்டெய்னர் லாரி மூலம் வந்துள்ளது. இதனை இறக்கும் பணியில் குடோனில் வேலை செய்த 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது எதிர்பாராத விதமாக பட்டாசு குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ முழுவதுமாக பரவி குடோனில் இருந்த பட்டாசுகள் முழுவதும் வெடித்து சிதறியது.
அப்போது வெளியில் வேலை செய்திருந்த லோகேஷ் மற்றும் பீமாராவ் இருவரும் தப்பி வெளியில் வந்துள்ளனர். ஆனால் குடோனுக்குள்ளாக இருந்த மற்றவர்கள் விபத்தில் சிக்கினர். இந்த நிலையில் இந்த விபத்தில் இதுவரை 14 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இதில் தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த டி.அம்மாபேட்டையை சேர்ந்த 8 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். ஒரே கிராமத்தைச் சார்ந்த வேடப்பன், இளம்பரிதி, ஆதிக்கேசவன், விஜயராகவன், ஆகாஷ், கிரி, முனிவேல் உள்ளிட்ட 7 வாலிபர்கள் உயிரிழந்தனர். இதனால் டி.அம்மாபேட்டை கிராமம் முழுவதும் சோகத்தில் மூழ்கியுள்ளது. மேலும் இறந்தவர்களின் வீட்டு அருகே உறவினர்கள் சூழ்ந்து கதறி அழுதனர். இந்த காட்சி பார்ப்பவர்கள் நெஞ்சை உருக்கும் நிலையில் இருந்தது. மேலும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 7 இளைஞர்கள் பட்டாசு வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் இந்த பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- நேருக்கு நேர் மோதிக்கொண்டன
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
செங்கம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அருகே உள்ள விருப்பாச்சிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் கவுதம் (வயது 21). இவர் திருப்பத்தூர் பகுதியில் தனியார் கல்லூரியில் கலை அறிவியல் படித்து வந்தார்.
இவருடைய உறவினர் பெயரும் கவுதம் (24). இருவரும் நேற்று திருவண்ணா மலையி லிருந்து கல்லாவி கிராமத்து க்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
செங்கம் அருகே உள்ள ரோடு கரியமங்கலம் பகுதியில் சென்றபோது ஓசூரில் இருந்து கும்பகோணம் நோக்கிச்சென்ற தக்காளி மற்றும் காய்கறி ஏற்றி வந்த லாரியும் இவர்கள் வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் கல்லூரி மாண வர் கவுதமும், அவரது உற வினரான கவுதமும் படுகா யம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர். அக்க ம்பக்கத்தில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆனால் டாக்டர்கள் பரிசோதித்த போது இருவரும் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
விபத்து குறித்து செங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்இன்ஸ்பெக்டர் பிரசாந்த் உள்ளிட்டோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- மீட்பு பணிகளை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணதேஜா நேரில் சென்று பார்வையிட்டார்.
- 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ளது பீச்சி அணை. இந்த அணை திருச்சூர் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு பாசனம் மற்றும் திருச்சூர் நகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. இந்த அணையில் பயணம் செய்ய பைபர் படகுகள் உள்ளன.
இந்நிலையில் சம்பவத்தன்று வாணியம்பாறை அருகே உள்ள கொட்டிச்சேரிக்குடி பகுதியை சேர்ந்த பால்சன் மகன் விபின்(26), ஹனீபா என்பவரின் மகன் நவுசாத்(29), ஆறுமுகன் என்பவரின் மகன் அஜித்(21), கொள்ளிக்காடு மணியங்கிணறு காலனியை சேர்ந்த சிவபிரசாத்(23) ஆகிய 3 பேரும் பீச்சி அணைக்கு சென்றனர்.
அவர்கள் அங்கிருந்த பைபர் படகில் மீன்பிடிக்க சென்றனர். அப்போது அவர்களது படகு அணையில் திடீரென கவிழ்ந்தது. படகில் இருந்த 4 பேரும் அணைக்குள் விழுந்து தத்தளித்தனர். அவர்களில் விபின், நவுசாத், அஜத் ஆகிய 3 பேரும் அணையில் மூழ்கினர்.
சிவபிரசாத் மட்டும் நீந்தி கரைக்கு வந்துவிட்டார். படகு கவிழ்ந்த சம்பவம் குறித்து அங்கிருந்தவர்களிடம் அவர் தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு பீச்சி போலீசாரும், திருச்சூர் தீயணைப்பு வீரர்களும் சென்றனர். அணையில் மூழ்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
பின்பு இரவு ஆகி விட்டதால் மறுநாள் தேடுதல் பணி தொடங்கப்பட்டது. மீட்பு பணிகளை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணதேஜா நேரில் சென்று பார்வையிட்டார். இந்நிலையில் அணையில் மூழ்கிய 3 வாலிபர்களும் அடுத்தடுத்து பிணமாக மீட்கப்பட்டனர். 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டது.
அணையில் படகு கவிழ்ந்து 3 வாலிபர்கள் இறந்த சம்பவம் திருச்சூர் பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
- மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை
- போலீசார் விசாரணை
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை சோளிங்கர் ரோடு பகுதியைச் சேர்ந்த கரண் (வயது 21), கணபதி நகரை சேர்ந்தவர் சரண்குமார் (22) மற்றும் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சுபாஷ் (30). இவர்கள் மூவரும் நண்பர்கள்.
இந்நிலையில் நேற்று மாலை வாலாஜாபேட்டையில் இருந்து காஞ்சிபுரத்திற்கு மெடிக்கல் பார்ம் வாங்குவதற்காக 3 பேரும் ஒரே பைக்கில் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டு இருந்தனர்.
அப்போது காவேரிப்பாக்கம் அடுத்த மலைமேடு அருகே வரும் போது பைக் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி தேசிய நெடுஞ்சாலையில் பாதையை மாற்றுவதற்காக வைத்திருந்த தடுப்ப கல் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கரண் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
பலத்த காயமடைந்த சரண்குமார் மற்றும் சுபாசை மீட்டு 108-ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கரண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிைலயில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுபாஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். சரண்குமாருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும் இந்த விபத்துக்கான காரணம் குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 2 பேரின் உடலும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
- விபத்து தொடர்பாக நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சேதுராயர்புரம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மந்திரமூர்த்தி(வயது 34). இவரது உறவினர் களக்காடு அருகே சிதம்பரபுரத்தை சேர்ந்த ரகுவரன்(26).
கட்டிட தொழிலாளர்களான இவர்கள் 2 பேரும் இன்று அதிகாலை நாங்குநேரியில் இருந்து நெல்லைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
மோட்டார் சைக்கிளை ரகுவரன் ஓட்டிச் சென்றுள்ளார். மந்திரமூர்த்தி பின்னர் அமர்ந்திருந்தார்.
நாங்குநேரியை கடந்து நான்குவழிச்சாலையில் உள்ள தனியார் மில் அருகே வந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியது.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த மந்திரமூர்த்தி சம்பவ இடத்திலேயே இறந்தார். ரகுவரன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இதுதொடர்பாக அந்த வழியாக சென்றவர்கள் நாங்குநேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ரகுவரன் மற்றும் பலியான மந்திர மூர்த்தி ஆகியோரை ஆம்புலன்சு மூலமாக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு செல்லும் வழியில் ரகுவரன் பரிதாபமாக இறந்தார்.
தொடர்ந்து 2 பேரின் உடலும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிளில் சென்ற பாஸ்கர், பிரகாஷ் ஆகிய இருவரும் தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்கள்.
- விபத்துக்குள்ளான கார் பக்கத்திலிருந்த பள்ளத்தில் இறங்கியதால் காரில் பயணம் செய்த 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
செஞ்சி:
புதுவை மாநிலம் வில்லியனூர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 30), பிரகாஷ் (31). இருவரும் நண்பர்கள். சென்னையில் தங்கி கட்டிட வேலை செய்தனர். இவர்களுடன் பணிபுரிபவருக்கு இன்று காலை செஞ்சியை அடுத்த பாக்கம் கிராமத்தில் திருமணம் நடைபெற்றது.
இதில் பங்கேற்க நேற்று நள்ளிரவு பாஸ்கரும், பிரகாசும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்னையில் இருந்து செஞ்சி நோக்கி வந்து கொண்டு இருந்தனர். அவர்கள் செஞ்சியை அடுத்த பெருங்காப்பூர் காப்புக்காடு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற பாஸ்கர், பிரகாஷ் ஆகிய இருவரும் தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்கள். விபத்துக்குள்ளான கார் பக்கத்திலிருந்த பள்ளத்தில் இறங்கியதால் காரில் பயணம் செய்த 2 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த செஞ்சி போலீசார், பலியான 2 வாலிபர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து செஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முனியப்பன் கோவில் அருகே இருந்த வளைவில் சாலையோரத்தில் இருந்த தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மோதியது.
- விபத்து குறித்து ராசிபுரம் இன்ஸ்பெக்டர் சுகவனம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள மேட்டுக்காடு அருந்ததியர் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன் (24), கூலி தொழிலாளி. இவரது உறவினர் அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (21). இவர்கள் 2 பேரும் நேற்று முத்துக்காளிப்பட்டி பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு கறி விருந்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
பின்னர் கறி விருந்தை முடித்துக் கொண்டு அவர்கள் 2 பேரும் மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தனர். இரவு 9.30 மணியளவில் அவர்கள் ராசிபுரம்-ஆண்டகளூர் கேட் சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள முனியப்பன் கோவில் அருகே இருந்த வளைவில் சாலையோரத்தில் இருந்த தடுப்பு சுவரில் அவர்களது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மோதியது.
இதில் 2 பேரும் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்திலேயே சுரேஷ் பலியானார். பிரபாகரன் காயத்துடன் உயிருக்கு போராடினார். இதுபற்றி தெரியவந்ததும் ராசிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த பிரபாகரனை மீட்டு சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் பலியானார்.
இதையடுத்து விபத்தில் பலியான சுரேஷ், பிரபாகரன் ஆகியோர் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து ராசிபுரம் இன்ஸ்பெக்டர் சுகவனம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- ரெயில் மோதி இறந்த 2 பேரும் 30 வயதுக்குள்ளானவர்களாக இருக்கலாம் என தெரிகிறது.
- 2 பேரின் முகமும் சிதைந்த நிலையில் இருப்பதால் அவர்களை உடனடியாக அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம்:
மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் மூலக்கரை சுரங்கப்பாதை ரெயில் தண்டவாள பகுதியில் இன்று அதிகாலை 2 வாலிபர்களின் உடல் சிதறி கிடந்தது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள் மதுரை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிதறி கிடந்த உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ரெயில் மோதி இறந்த 2 பேரும் 30 வயதுக்குள்ளானவர்களாக இருக்கலாம் என தெரிகிறது. வெள்ளை நிற சட்டையும், ஜீன்ஸ் பேண்ட்டும் அணிந்திருந்த அவர்களின் விவரம் குறித்த எந்த ஆவணங்களும் கிடைக்கவில்லை. அவர்களது சட்டை பையில் இருந்த துண்டு சீட்டில் செல்போன் எண் இருந்தது. அதனை தொடர்பு கொள்ள முயன்றபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
2 பேரும் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது ரெயில் படியில் நின்று பயணம் செய்யும்போது 2 பேரும் தவறி விழுந்து இறந்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 பேரின் முகமும் சிதைந்த நிலையில் இருப்பதால் அவர்களை உடனடியாக அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து நடந்த பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்